புவி வெப்பமயமாதல் - 2
வளர்ச்சி வளர்ச்சி என்னும் பேரில்
நாம் செய்த புரட்சி
பருவ நிலை மாற்றத்திற்கு
ஒரு காரணமாய்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஒருபுறம் அளவின்றி மழையும்
ஒரு புறம் வறண்ட வானிலையும்
ஒருபுறம் அசுர பனி பொழிவும்
ஒருபுறம் சுவாசிக்க முடிய காற்றும்
கட்டுக்குள் நிலைமை இல்லை
காடுகள் நம்மிடம் இல்லை
காணி நிலம் இல்லை
கணினி கண்ட அறிவு
விவசாயம் இல்லாமல் ஒரு பக்கம் சரிவு
வயல் வெளிகள் எல்லாமே வீடுகள்
கட்டிவிட்டால்
நாளை தலைமுறை
சோற்றுக்காக கூட கையேந்தும்
நிலைமை வரும்
எதை விட்டு செல்ல போகிறோம்
நம் தலைமுறைக்கு
எங்கு சென்று ரசிப்பர்
இயற்கையை விடுமுறைக்கு
காரணம் தேடி பூமி ரணமாய்
மாறி கொந்தளிக்கும் முன்
இயற்க்கை நம் கட்டுக்குள் வேண்டும்
நாளை தலைமுறை வாழ வேண்டும்
மற்றவரை குற்றம் சொல்லி
வாழும் கூட்டம் உண்டு
அவர் குடும்பமும் வாழ
வழி தேடுகிறோம் இன்று
பிழைப்பதில் கடினம்
இருப்பதில் கடினம்
இறந்த பின்னும்
இடம் கிடைப்பது கடினம்
இருக்கும்வரை இயற்கையை
சேதமின்றி காக்க யோசி
இல்லையென்றால் நாம்
மீண்டும் ஆதிவாசி