தமிழ்ப்புத்தாண்டு 2017

தமிழ்ப்புத்தாண்டு 2017

சித்திரை திங்கள் சீராட்ட வருகிறாள்
சிகரங்கள் தொட சிறகுகள் வளர்த்துக்கொள்

மேகங்கள் திரண்டு மழை பொழியட்டும்
சினந்த புவியின் சீற்றம் குறையட்டும்

காடுகள் வளர்க்கும் மானிடர் பெருகட்டும்
சுரண்டாத ஆறுகள் சுதந்திரமாய் ஓடட்டும்

நேயம் தழைத்து வறுமை ஒழியட்டும்
இயற்கை விவசாயம் வீழாமல் செழிக்கட்டும்

ஆரோக்கியம் பேணி ஆயுளை கூட்டிக்கொள்
வளங்கள் யாவும் வற்றாமல் பார்த்துக்கொள்

நேசம் போற்றும் உறவுகள் சேர்த்துக்கொள்
மாற்றங்கள் ஏற்கும் மனதினை வளர்த்துக்கொள்

இயற்கையை ரசிக்கும் தருணங்கள் கூட்டிக்கொள்
சிரிக்கவும், சிந்திக்கவும் திறமையை வளர்த்துக்கொள்

வாழும் நாட்களில் வெற்றியை சூடிக்கொள்
தடைகளை தாண்டும் வலிமையை வளர்த்துக்கொள்

நித்தம் மகிழும் நெஞ்சம் நிறைந்த
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : அருண்மொழி (14-Apr-17, 2:39 pm)
பார்வை : 471

மேலே