புது பாதம் பூமி தொடும்
தனிமை கால தாகம்
தவிர்க்க வரும் மேகம்
அந்தி மாலை நேரம்
அனைத்திட தேகம் எங்கும்
அடைமழை காலம்
அணைக்க நேரம் கூடும்
மழலைக் கோலம் காண நேரும்
வெக்க மின்னல் வெட்டி செல்லும்
சிவந்த கன்னம் இருளில் மின்னும்
சிந்தும் முத்தம் காதல் சொல்லும்
சிணுங்கும் சந்தம் உயிரை கொல்லும்
அழகும் ஆசையும் மெல்ல மோதும்
மோகம் கொஞ்சம் காதல் வெல்லும்
உணர்வும் உயிராய் உன்னுள் உருகும்
சொர்கம் நம்மை சேர ஏங்கும்
உயிர்க்குஉயிராய் உறவொன்று
உயிர்ப்பெரும் உருப்பெறும்
பத்து மாதம் பார்த்து இருக்க
புது பாதம் பூமி தொடும்