குமுறும் பேனா
குமுறும் பேனா
அவன் விரல் நடுவே
சிக்கிய என் கழுத்தை
சிந்திக்க மறந்த கயவன்!
என் அடிவ்யிற்றின்
கடைசித்துளியை
கக்கும்வரை
அவன் பிடி
தளரவில்லை...
ஆங்காங்கே
குத்திட்டு நின்றேன்
சோம்பி....
விடவில்லை
உதறிட்டான் என்னை
தலைகீழாய்....
அவன் சிறந்த
எழுத்தாளனும் என்னால்!
அவன் பெயர்
எழுதுவதும் என்னால்!
ஏனோ ஏணியை மறந்த
ஏற்றங்களில் மனிதன்!. . . . . . .
சு,உமாதேவி