மணலும் சணலும்

ஏண்டி பொன்னி, வெளிநாட்டுக்குப் போன நீ அஞசு வருசம் கழிச்சு
குடும்பத்தோட வந்திருக்கற. எல்லாம் நல்லா இருக்கறீங்களா?
😊😊😊😊😊😊
நாங்க நல்லா இருக்கறோம் அத்தை. நீங்க நல்லா இருக்கறீங்களா?
😊😊😊😊😊😊
எனக்கு தொண்ணூறு வயசு ஆகுதடி பொன்னி. தோட்ட வேலை செஞ்சு வைரம் பாஞ்ச ஒடம்புடி இது. என்னோட வாழ்நாளில நான் ஒரு நாள்கூட ஒடம்புக்குச் சரில்லன்னு படுத்தது கெடையாதடி. யாரு இந்த ரண்டு கொழந்தைங்களும்.
😊😊😊😊😊😊
என்னோட ரட்டைப் பொண்ணுங்க அத்தை. அவுங்கள வாழ்த்துங்க அத்தை.
😊😊😊😊😊
மகராசிங்களா இருங்கடி செல்லங்களா. ஆமா, இவங்க பேருங்கள நீ சொல்லவே இல்லையே!
😊😊😊😊😊
ஒருத்தி பேரு சணல் (vigorous)
இ ன்னொருத்தி பேரு மணல் (bird).
😊😊😊😊😊😊
என்னடி பொன்னி சாக்கு பை தயாரிக்கப் பயன்படுத்தும் சணலையும், கார போட பயன்படுத்தும் மணலையும் புள்ளைங்களுக்குப் பேருங்களா வச்சிருக்க? உனக்குத் தமிழ்ப் பேருங்க எதுவுமே கெடைக்கலையா?
😊😊😊😊😊😊
அத்தை, சினிமா வந்த காலத்திலிருந்தும் அதுக்கு முன்னாடியும் கடைச் சங்க காலத்திலிருந்து வேற மொழிப் பேருங்களப் புள்ளைங்களுக்கு வைக்கறது நம்ம வழக்கம். சங்கம் -ங்கறதே தமிழச் சொல் இல்ல. பெரிய புராணத்தில "கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து" என்று தொடங்கும் பாடல் சிவபெருமான் தமிழ்க் கழகத்தில் (சங்கத்தில்)
நக்கீரன் போன்ற புலவர்களுடன் பங்கேற்றார்ன்னு சொல்லப்பட்டிருக்குது. சினிமா வந்ததுக்கப்பறம் பிறமொழிப் பேருங்கள பொதுவாகவும், சமஸ்கிருதம் மற்றும் இந்திப் பேருங்கள அதிக அளவிலும்
புள்ளைங்களுக்கு வைக்கற பழக்கம் ஏற்பட்டு இப்ப உச்சநிலையை அடைஞ்சிருக்குதுங்க அத்தை.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சான்று:(indiachildnamescom)

எழுதியவர் : மலர் (23-Apr-17, 7:39 pm)
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே