அன்போடு வாழுங்கள்

போலித்தனமான நடிப்பை அன்பென்று இருதயங்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை உண்மையான அன்பை அறிய முடியாது தவிக்குமென்பதைக் காணுகையில் சிரிப்பு வருகிறதென்றாலும்,
பகுத்தறிவுள்ள மனிதர்கள் இவ்வளவு பெரிய முட்டாள்களாக வாழ்கிறார்களே என்ற வருத்தமே மேலோங்குகிறது அன்பே....

நடிப்பில்லா உண்மையாய் வாழ்வதே கலையென்று அறியாது நாளும் ஒரு வேடமிட்டு வாழும் இவ்வுலகில் உண்மையென்பது கசப்பாய் தானிருக்கும்...
கசப்பை உண்ணத் தகாதென ஒதுக்கி வாழும் மனிதர்களுக்கு உண்மையை ஏற்பதென்பது கடினமே...

உண்மைக்கு அங்கீகாரம் கிடைக்காத வரை இவ்வுலக வாழ்க்கையென்பது பூரணமடையாமல் நீண்டு கொண்டே சங்கடங்களால் சங்கமிக்கும்....

அச்ச மயம் சூழ்ந்த அச்சமயம் அன்பென்பது அடியோடு வலுவிழந்து சுயநலமே தாண்டவமாடும்...

கொள்ளையிட்ட கூட்டமெல்லாம் அன்பில்லாக் கூட்டமே...
கொலை செய்த கூட்டமெல்லாம் அன்பில்லாக் கூட்டமே...
ஒழுக்கமில்லா கூட்டமெல்லாம் அன்பில்லாக் கூட்டமே...

பணமென்னும் சாட்டை கொண்டே ஆடம்பரத்தில் பம்பரமாய் ஆடும் கூட்டமெல்லாம் அன்பில்லாக் கூட்டமே....

அன்பில்லாக் கூட்டமே அன்பின் மதிப்பறியாது, தவறிழைத்து துன்பக்கடல் மூழ்கும் என்பதே சத்தியம்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Apr-17, 9:10 pm)
Tanglish : anbodu valungal
பார்வை : 733

மேலே