காலம் முழுக்க நீ வேண்டும்

மனத்தின் ஆழத்தில் மலர்ந்தஎன் காதலை
மங்கைநீ ஏற்க வேண்டும்
கண்ணில் நிறைந்த என்காதல் கதைகளை
காதில்நான் சொல்ல வேண்டும்
செவ்விதழ் மலர்ந்து சிரிப்பை உதிர்த்து
சேதிநீ கேட்க வேண்டும்
நெஞ்சம் மகிழ்ந்து நெகிழ்வாய் முத்தம்
எனக்குநீ தருதல் வேண்டும்
மலராய் மணமாய் கனியாய் சுவையாய்
மனமொன்றாய் வாழ வேண்டும்
இதயம் இணைந்ததோர் இனிமை வாழ்வு
இமயமாய் நீள வேண்டும்
மனதில் நிறைந்த மலருன்னைப் பிரிவதென்
மரணத்தில்தான் வர வேண்டும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (24-Apr-17, 2:11 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 107

மேலே