வேண்டும் அன்பு காதலன்

சிட்டுக்குருவிபோல் திக்கெட்டும் எனைகூட்டி.,
கட்டி அனைத்தெந்தன் அன்னையாய் மாறவேண்டும்.
எண்ணிமுடிக்கும்முன் என்முன்னே நிஜமாக்கி
ஆனந்தஅழுகையை அவன்மட்டும் தரவேண்டும்.
மாலைஇரவை மணக்கையில் ,என்அருகில்
அவன் இருக்கையில் ,
விழிநான்கும் பேசிட., அவன்
விரல் பட்டு நான் கூசிட,
அழகான அத்தருணம் அகலாமல் தொடரவேண்டும்.
பொய்கோபம் கொண்டுநான்
மெய்யாலும் சண்டையிட, ஆற்றுப்படுத்தும் அவன்
அன்பில்நான் கரையவேண்டும்.
நோய்கொண்டுநான்படுத்தால்
தாய் போல எனைக்காத்து
பாய்போல அவன்மார்பில்
சேய்போல் நான் உறங்கவேண்டும்.
நேரம் பொழுதெல்லாம் அவன்முன்னே கடக்கவேண்டும்.
சேருக்குள் செந்நீராய் அவனுக்குள் கலக்கவேண்டும்.
பேச்சிலும்.,மூச்சிலும் உயிராக நான் மட்டும்.
எத்தனை பேர்களுக்கு நிஜமாக இவை கிட்டும்?

எழுதியவர் : கு.தமயந்தி (2-May-17, 8:59 am)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 181

மேலே