கடலும் கரையும்

ஓயாத அலையால் யாரை அடிக்கடி பார்க்க வருகிறாய் ?
கரையின் மீது காதலா ? அல்ல மோதலா ?
ஓ காதலா !!
அடிக்கடி, நண்டுகளை கரைக்கு தூது அனுப்புகிறாயே !
நீ அனுப்பிய செய்தியை மண்ணில் கோலமிட்டுக்கொண்டே
போய் கரையில் சேர்த்தது தபால்கார நண்டு ,
என்ன தூது அது ?
இரவில் யாருக்கும் தெரியாமல் சந்திக்க வேண்டுமோ ?
எப்படி சாத்தியம் ?
நிலவுதான் நம்மை உளவு பார்க்கிறதே !
என்ன செய்வது ?
மேகக் கூட்டம் நிலவின் கண்ணை மறைக்கும் நேரம்
கலங்கரை விளக்கம் சந்திப்பிற்கு ஒளி தூது அனுப்பும் !
திட்டம் கைகூட ….
சந்திப்பில் இருவரும் ஆனந்தம் கொள்ள ,பொறுக்காத
சூரியன் விடியலை திணித்து நம்மை பிரித்தது !!
நம்மை பிரித்த சந்தோசத்தில் சூரியன் மகிழ ,
மீண்டும் இரவு வரும் வரை நான்
காத்திருந்தேன் !!!
நம் காதல் அலையும் கரையுமாய்
தொடர்ந்து கொண்டே இருக்கும் !!!