என் முத்தஅழகி நீ
என் முத்த(அ)ழகி நீ...
********
இதயம் கனக்குதடி
நீ இல்லாத நாட்களை
நினைக்கையிலே ..
ஈரம் இன்னும் காயவில்லை
உன் இதழ்கள்
பட்ட இடமெல்லாம்...
இறுக்கிப்பிடித்த உன் விரல்களின்
இரேகைகள் தேகமெங்கும்
ஓவியமாய் பூக்குதடி....
இரவுக்காய் காத்திருந்தேன்
இன்னுமொரு முத்தம்
நீ கொடுப்பாயென்று....
விடியலையும் விரட்டி
விழித்திருந்தேன் அணைத்துக்கொள்ள
நீ அழைப்பையென்று...
உன் மௌனத்தை உடைத்தெறிந்து
மறு உலகம் -
காண்பாய் என்னுள்ளே...
காதோரம் சுவாசம் சூடேற்றி
கண்மூடியே அமிர்தம்
காண்பாய் என்னுள்ளே...
உன் இதழ்களை
அருந்திய நொடியிலிருந்து
இன்னும் அந்த இருள்களை
நேசிக்கத்தோன்றுகிறது....
மெதுவாக நான் உன்னை -
அழைக்கும் அழகில்
மயங்கிப்போவாய்
என் மார்பின் மேலே....
பயத்தோடு பாதி இரவும்
முத்தத்தோடு மீதி இரவும்
உன் மடியில் விடியுமடி.....
என் ஆண்மையை
சுண்டி இழுத்த அழகிய கவிதை
நீ என்பதில் ஐய்யமில்லையடி.....
யாரும் சொல்லவில்லை
உன் அழகையும்
உன் முத்தத்தையும் பற்றி
நீ முத்த(அ)ழகி என்று....
மீண்டும் வருமா ??
நீ மீட்க முடியாமல் தந்த
நினைவலைகள்....