காதல் , அழகு

உன் மௌனத்திரையை
உடைத்தெறிய மறந்து விட்டேன்.
*****
கரைத்தாண்டி நீ இருந்தாலும்
காற்றோடு பேசு
என் காதுகள் கேட்கும்.

விழிகளிலே மிதக்கிறாய்,
உயிரைப்பறிக்கிறது உன் புன்னகை,
உணர்வுகளை உடைக்கிறாய்.

பாதங்கள் பயணிக்க மறுக்கிறது
நவீன முறையில் உன் -
நினைவுகள் தரும் ரணத்தோடு..

பிறந்தாலும்,இறந்தாலும்
உனக்காக வேண்டும்.

உன்னோடு என்னை
சேர்த்துக்கொள் -இல்லை
உயிரோடு என்னை புதைத்துக்(கொள்).

நீ யார் என்று தொடங்கிய பயணத்தில்
நான் யார் என்றே
தெரியாமல் போகிறேன்..

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (21-May-17, 11:11 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 131

மேலே