வளையற் சிந்து

கனியமுதே கவினொளியே
காதலெனும் பூவே – தினம்
காத்திருக்கும் தீவே – மனக்
காகிதத்தின் பாவே – உனைக்
கரம்பிடிக்க நாள்பார்பேன்
கண்மணியே வாவே!
பனித்துளியே புதுமலரே
பசுங்கிளியே பேசு – என்
பகல்நிலவே வீசு – எனை
பக்குவமாய் பூசு – உளப்
பரிதவிப்பை உணர்ந்தணைத்தால்
படர்ந்திடுமோ மாசு.
*மெய்யன் நடராஜ்