அப்துல் ரகுமானின் அட அட கவிதை கருணாநிதியைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை

திமுக தலைவர் கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பகிர்வு ஒன்று...

நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதைகளை நான் எப்போதும் ரசித்துப் படிப்பேன். இனிய உதயம் என்ற இலக்கிய இதழில் இந்த மாதம் அவர் எழுதிய கவிதையை நான் படித்து ரசித்தேன். அதன் ஒருசில பகுதிகள்:


அண்மையில் படித்து ரசித்த ஒரு கவிதை:-நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதைகளை நான் எப்போதும் ரசித்துப் படிப்பேன...


அரசு ஊழியர்களே! அரசு ஊழியர்களே!
அஞ்சி அஞ்சி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே!
உங்களுக்கோர் நற்செய்தி; இனிமேல்
அஞ்சாமல் வாங்குங்கள்; சட்டமே அனுமதிக்கிறது!
ஆனால் எச்சரிக்கை; இருபது சதவீதத்திற்கு
மேலே போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

அப்படியே போனாலும் கவலையில்லை; நீங்கள்
தப்பாகச் சம்பாதித்த பணமே
உங்களை வெளியே கொண்டு வந்து விடும்!
தப்பே உள்ளே தள்ளும்;
தப்பே வெளியே கொண்டு வந்துவிடும்;
இதுதான் இந்நாட்டின் நீதி!

"தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!

உங்களுக்குக் கூட்டல் சரியாக வராதா?
அப்படியென்றால் நீதிபதியாகி விடுங்கள்!
அப்புறம் கூட்டல்தான், பெருக்கல்தான்!
அபாண்டமா பழி போடாதீங்க, மத்திய அரசு தலையீடு இதில் இல்லை; விலையீடுதான் நடந்தது!
நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது;
ஏனெனில் அவருக்கிருந்தது வெளிநோக்கம் தான்;
வெளியே விடும் நோக்கம்!"

(இந்தப் பாணியில் அந்தக் கவிதை நீளுகிறது)

எழுதியவர் : (3-Jun-17, 1:31 am)
பார்வை : 79

மேலே