எங்களை வெட்டாதீர்

........எங்களை வெட்டாதீர்.....
உண்டு மகிழக் கனிகள்
தந்தோம்
ஊஞ்சலாட கிளைகள்
தந்தோம்
உதிரும் இலைகளையும்
உரமாய்த் தந்தோம்..
உறங்கி இளைப்பாற
நிழலைத் தந்தோம்
வறட்சி போக்கிட
மழையைத் தந்தோம்
வருடிச் சென்றிட
தென்றல் தந்தோம்..
மணம் வீசிடும் மலர்கள்
தந்தோம்
மனதை மகிழ்விக்கும்
குளிர்மை தந்தோம்
உயிர் காத்திட
ஆக்சிஜன் தந்தோம்..
இத்தனையும் தந்தும்
இன்று விறகாய்
எரிகிறோம்
உதிரம் வழியத் சிறு
துண்டுகளாய் நாமும்
உடைந்தே வீழ்கிறோம்..
-உதயசகி-