தோற்றம்தான் எப்போது

கவலைகள் கூடுவதால்
சிந்தனயும் சிதறுகிறது ....
நாடும் காடாவதால்
வாடுகிறது நெஞ்சமும் ....
குற்றங்கள் பெருகுவதால்
குமைகிறது மனதிற்குள் ....
சீரழியும் கலாச்சாரத்தால்
சீற்றமே எழுகிறது ....
அரசியல் நிகழ்வுகளால்
அழுகிறது உள்ளம் ...
மாசுபடிந்த சமுதாயத்தால்
மனவலியும் கூடுகிறது .....
மாற்றம்தான் ஒரேவழி
தோற்றம்தான் எப்போது ....????
பழனி குமார்
06.06.2017