நான் இருப்பேனா உன்னில் நிஜமாய்

செம்மலர் எடுத்தாள் இதழில் நிறமாலை தொடுத்தாள்
தங்கம் கரைத்தாள் அவள் தூரிகை எடுத்தாள்
அங்கம் யாவும் தங்கம் வரைந்தாள்
நிலவைப் பறித்தாள் தன் முகத்தில் பொறித்தாள்
மயிலாடை அணிந்து அன்னமாய் நடந்து
இளமை தோட்டத்தில் பூத்த ஒற்றை ரோஜாவாய்
கண்முன் அசைந்து வந்தாள்
கண்களால் என்னை எய்தாள் என்னுடலில் அக்கணமே புகுந்தாள்
உள்ளில் என்னென்னமோ செய்தாள்
பகல் முழுதும் நினைவில் நுழைந்து மகிழ்வு பெய்தாள்
இரவு முழுவதும் என்னில் இருந்து தூக்கம் கொய்தாள்
பெண்ணே எய்தாய் பெய்தாய் என்னைக் கொய்தாய்
நான் ஆனேன் உன்னிடம் கைதாய்
உள் மனதில் என்றும் வைப்பாயா என்னை நிஜமாய்
இன்றேல் என் வாழ்வே ஆகிப் போகுமடி ரணமாய்

ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (10-Jun-17, 2:11 pm)
பார்வை : 239

மேலே