சுற்றுலா

பெயர் வைத்துவிட்டதும் புறப்பட்டு விட்டதோ
தமிழ்நாட்டின் நிலைக்காண தலைப்பட்டு விட்டதோ
கடற்கரை சுற்றிப்பார்க்க ஆசையேன் பட்டதோ
நாட்டிற்குள்ளும் முகம்காட்ட எத்தனித்து விட்டதோ

வர்தாவின் வருகையால் முடிங்கியதோ நகரெல்லாம்
மேகத்தையும் வேகமாய் அடித்துதான் வைத்ததோ
ஓயாத அழுகையால் கண்ணீராய் ஓலங்கள்
வர்தாவின் சுற்றுலாவால் வாசமிழந்து தமிழ்முகங்கள்

காசா பணமா பையா உடையா
நினைத்ததும் கிளம்பி நாட்டிற்குள் நர்த்தனம்
இன்பச் சுற்றுலாவென பள்ளியில் சொன்னதுண்டு
துன்பச் சுற்றுலாவிற்கு வர்தாவே நீசான்று

மரமெல்லாம் சாமிஆட்டம் ஓயாத பேரிரைச்சல்
தெருவெங்கும் பெருவெள்ளம் சாலையெல்லாம் கூவம்
சுற்றுலாவா வந்திட்டாய் சுற்றிச்சுற்றி அடித்திட்டாய்
வர்தாவே போதும்ஆட்டம் விட்டுவிடு "அழுதிடுவேன்"

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-17, 9:35 am)
பார்வை : 2506

மேலே