நீர் வற்றிய குளம்

தேன் வற்றிப்போகும்போது தேனாடையில் தேனீக்கள் அற்றுப்போகுமாப்போல்
நீர் வற்றிய குளமாகும்போது
குளத்தினிலே வாழ்ந்திருந்த
மீன்களற்றுப் போகும்
சிறகை விரித்து பறந்துவந்து
பட்ஷணம் உண்ட பட்ஷிகள்
குளம்நாடி அதில் ஜலம்தேடி
களைப்பாற ஏமார்ந்து நாளும் பெருமூச்சு இட்டுச் செல்லும் நிலை கண்டோம்
குளக்கரை யோரங்களில் கைக்கோர்த்து நின்ற
தாவர வகைகள் யாவும்
தங்கள் தலைமுடியாகிய பசும் தழைகளை இழந்து மொட்டை ஆண்டியாய் நின்றேங்கிய கோலம்
கன்னியர்கள் குடம் ஏந்தி நீரின்றி நாவறள தாகம் தொண்டைக்காய
தவித்து கால்கடுத்து போகும்நிலை" நீர் வற்றிய குளம்" கண்டதிக்காலம்
அக்குளத்திலே தாமரையும் பூத்தில்லை அதன்மேல் சரஸ்வதியும் அமர்ந்தில்லை "நீர் வற்றிய குளம்" காத்து நின்றிருக்க அறிவீரோ
குளமாக இருந்த போது குடிநீராக குடித்து தாகந்தீர மகிழ்ந்தார்கள் வறண்டு
காணும் குளத்தில் ஆக்கிர மித்து குடியமர்ந்து குடிக்க நீர் கிடைக்காதா என்றே
ஏங்கி தவிக்க மனிதகுலம்