புதுக்கவிதை
விழியே கதை எழுது
உன்விழிகள் பேசுகின்ற
ஊர்தனிலே நானிருப்பேன்
பன்மொழிகள் காட்டுகின்றாய் !
பாங்குடனே உன்னழகில் .
கன்னியுந்தன் காதலினால்
காண்கின்ற காட்சியினால்
என்மொழிகள் மறந்திடுதே !
என்செய்வேன் சொல்லிடுவாய் .
மின்னுகின்ற கண்களினால்
மின்சாரம் பாய்ச்சுகின்றாய்!!!!
முன்னுரையைச் சொல்லியுமே
முத்தான புன்னகையால்
நன்னெறிகள் ஊட்டுகின்றாய்
நாளுமுனைப் பாடுகின்றேன்
உன்னதமாய் இவ்வுலகில்
உள்ளவளே ! நீவாழ்க !
வன்முறைகள் வேண்டாமே !
வாசமுள்ள காதலிலே!
என்னருகே வந்திடுவாய் !
என்னுயிரும் நீயன்றோ !!!!
உன்றனையே நினைத்திட்டேன்
உள்ளன்போடு காதலித்தேன்.
என்றனையே மறந்திட்டேன்
எத்திக்கும் உன்நினைவே .!
சென்றயிடம் சொல்லிடுவாய்
சேர்ந்திடுவேன் உன்னுடனே!
வென்றிடுவோம் காதலிலே .
வெற்றிகளும் கிட்டிடுமே!
விழியே நம்காதலுமே
விருட்சமாய் நின்றிடவே
கண்களினால் கதையெழுது !!!
படைப்பு :- சொந்த படைப்பு
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
முகவரி :- 50 , சேதுராமன் பிள்ளைக் காலனி , டிவிஎஸ் . டோல்கேட் , திருச்சி - 20
தொடர்புக்கு :- 9443206012