ஈரநிலம்

கனவெல்லாம் செண்பகபூக்களாய் மலர்கிறது

கருமேகம் பொழிந்த மழைத்துளியாய நினைவு் உயிர்பெறுகிறது

பாத்திரம் நிரம்பி நுரை பொங்கி வழிந்த பாலின் வாசம நினைவின் முதல் வரிசையில் நிற்கிறது

வீிடு முழுதும் நிலக்கடலையை பரப்பிய நேரங்கள் வாசல் முழுதும் நெற் குவியலை குவித்த தருணங்கள் பசுமையாய் இருக்கிறது

ஆலை கரும்பை கடித்து உரித்த பல்லின் வலி உயிர் பெறுகிறது

முன்று தலைமுறையாய் நின்று கொண்டே இருக்கும் தேக்கு மரத்தின் உயரம் குறைந்துவிடவில்லை

வாய்க்கால் ஓரம் மட்டும் வளர்ந்து நிற்கும் பச்சை புற்களை நோக்கி மட்டும் தன் மேய்சலை திருப்பும் செவலை மாடும் அதன் வெள்ளை கன்றும் கத்தி கொண்டே இருக்கிறது

உயரமான தென்னை மரங்கள் உதிர்த்து கொண்டே இருக்கிறது தனது காய்ந்த செக்கு மட்டைகளை பெருத்த சத்தத்துடனே

மழையும் மண் வாசமும் வீசும் பெருங்காற்றால் நெருங்கி வருகிறது

இவையெல்லாம் நினைவுகளகவே தொடர்கிறது

பற்பசையும் பாக்கெட் பாலுடன் துவங்கும் தினசரி வாழ்வு
இரவு வாட்ஸ்அப்பை லாக்அவுட் செய்வதுடன் முடிகிறது

ஈரநிலத்தின் நினைவுகளோடு
உயிர்வேதியியல் இராசயன உணவுகளோடு கரைகிறது வாழ்வு

எழுதியவர் : (6-Jul-17, 5:32 pm)
சேர்த்தது : ganeshan
பார்வை : 195

மேலே