மனசு

ஆன்மீக இலக்கியமும்
நாத்திக விஞ்ஞானமும்
ஆளுக்கொரு தொலைநோக்கியை
வைத்துக்கொண்டு இன்னும்
இங்கே காணும்
மொழி உருண்டைகளுக்கு
பெயரிட்டுக்கொண்டே
இருக்கிறார்கள்
தீராத முடிவிலியாய்
மனிதனுக்குள் ஒரு மொழிப்பால்வெளி


எழுதியவர் : இம்மானுவேல் (20-Jul-11, 7:45 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 405

மேலே