அவனும் நிலவும்

தண்ணீர் மீது தீராப்பற்று கண்டதும் குதிப்பான்
சலிப்பின்றி குளிப்பான் - இரவு முழுவதும்
அவன் நீராடுவது அழகினும் அழகு....
அழகிலும் சளைத்தவன் அல்ல எத்தனை பிரகாசம்
எனக்காக காத்திருப்பதில் உன்னையும் மிஞ்சிவிட்டான்
ஒளிந்துகொண்டு என்னை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாவான்...
விடியும்முன் சென்றுவிடுவான் வேலைப்பளு அதிகம் போல
உனக்கு முன்னரே வந்துவிடுகிறான் - போட்டி
காலம் தவறாமையை அவனிடம் கற்கவேண்டும்...
கடமையிலும் கெட்டிக்காரன் மாதம் ஒருமுறை மட்டுமே விடுப்பு
எங்கிருந்தாலும் எளிதில் என்னை கண்டுபிடிக்கிறான்
காவலாக வருவது அவனது தனிச்சிறப்பு....
உன் மீது எவ்வளவு பொறாமை அவனுக்கு
உன்னோடு என்னை கண்டால் இளைத்துவிடுகிறான்
இரவுநேரச்சாரல்கள் அவனது கண்ணீர்துளிகளோ என்னவோ....