பெண்கள் அன்றும்,இன்றும்-02
பெண்ணின் சிற்றிடைக்கு
அலங்காரம் ஒட்டியாணம்
இன்று காணாமல் போனதேன்
சிற்றிடை இல்லாமல் போனதாலோ
முகத்திற்கு மஞ்சள் பூசி குளித்திடு
முகத்திற்கு மங்களம் தந்திட
என்றால் அது உங்கள் காலத்தில்
என்பர் இக்காலப் பெண்கள்
மஞ்சள் ஓர் உயர்ந்த கிருமி நாசினி
முகப்பு பருக்கள் வராமல் காத்திடும் என்றால்
பூசி பார்ப்பார் பல பெண்கள்
அழகிய முகத்திற்கு நெற்றி போட்டு
ஒரு காப்பு என்றால் எல்லி நடப்பர்
இன்றைய நாலும் அறிந்த
நவநாகரீக பெண்கள்
நெற்றியில் பொட்டு ஒரு 'அக்குபிரெஸ்ஸார்'
மூளைக்கு தீர்மானித்த தரும் என்றால்
பொட்டு த்தை கொள்வர் சிலர்
இப்படித்தான் கால் விரலுக்கு மெட்டி
பெண்ணிற்கு ஓர் தற்காப்பு மற்றும்
நல்ல ஆரோக்கியம் தரும் அக்குபிரெஸ்ஸார்
செவிகொடுப்பார் சிலர்
இது விஞான வளர்ச்சியில் எல்லைக்
காணும் யுகம்
இளைஞர்கள் ஒவ்வொரு செயலுக்கும்
விளக்கம் கேட்பார்
கலாச்சாரம்,பாரம்பரியம் என்றெல்லாம்
கூறி அவர்களை செய்யப்பட செய்தல்
இயலாததொன்று
நாமும் நம்மை சற்று மாற்றிக்
கொள்ளலாமே
அவர்கள் கேள்விகளுக்கு
சிறந்த பதில் தந்து
விளக்கிடலாமே