விமர்சனம்

ஊரெங்கும்
உன் பேச்சு
என் உயர்வுக்கும்
மகிழ்ச்சிக்கும்
நீ தானே
நிதர்சன ஆதாரம்

உன் வரிவடிவத்
தாக்குதலில்
என் கண்கள்
விழித்ததுமுண்டு—கண்ணீர்
விட்டதுமுண்டு

என்னை தேடி
நீ வந்தபோதெல்லாம்
என் நெஞ்சம்
வருந்தியதுமுண்டு
திருந்தியதுமுண்டு

நன்பனைப்போல்
நெருங்கி பக்கம் வா
உன் நல்ல கருத்து
என் நேர்மைக்கு
என்றென்றும்
பக்க பலமாகும்.

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jul-17, 3:57 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vimarsanam
பார்வை : 65

மேலே