எட்டி நில்
எட்டி நில்...
ஒரு அழகான வனப்பகுதி . அங்கே பலவிதமான விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆடுகளுக்கு புற்கள் கிடைத்ததில் அவற்றிற்கு மகிழ்ச்சி.. நரிகளுக்கு ஆடுகள் கிடைத்ததில் நரிகளுக்கு மகிழ்ச்சி .. மரங்களில் பழங்கள் நிறைந்து இருந்ததால் குரங்குகளுக்கும் மகிழ்ச்சி என ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு வகையில் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வந்தன
ஒருநாள் வழிதவறிய சிங்கம் ஒன்று அந்த வனப்பகுதியை கடந்து சென்றது . அதை அறிந்த ஆடுகள் ஏதோ பிரச்சனை வந்தாக வருந்தி புற்களை மறந்து சோர்ந்து சிங்கத்திற்கு இறையாகி உயிரைவிட்டன.. தந்திரம் என பதுங்கிய நரிகளும் உணவு இன்றி வருந்தியே வாழ்ந்தன. ஆனால் சிங்கத்தின் உருவில் வந்த பிரச்சனையை எட்டி நின்று பார்த்துப் பழகிய
குரங்குகளோ .. வாழ்வில் எந்த மாற்றமும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தன..
இப்படித்தான் நாமும் நமக்கு வரும் பிரச்சனைகளை அருகில் வைத்துப்பார்த்து ஆடுகளாய் அழிகிறோம்.. அல்லது நரிகளைப் போல வருந்தியே வாழ்கிறோம் . குரங்குகளைப் போல எட்டிநின்று பார்க்கும் வாய்ப்பொன்று இருப்பதை மறந்து ...
-மூர்த்தி