காற்றே பூங் காற்றே

என்னவளே !
நீ சிரித்தால் ஓர் கொடிமுல்லை
உன் இதழ்களின் இடுக்கில் வந்து பூக்கும்
என் முகம் பார்க்கும் உன் புன் சிரிப்பில்
காதல் மணமும் கலந்து விட்டால்
அப்போதே ஆயிரம் முல்லைகள்
என்னுடல் வெளியில் வந்து அணியாகப் பூத்து விடும்
மலர்ச் சாரலில் எழுந்து வீசும் பூங்காற்று
என்னிதய வீட்டில் உள் நுழைந்து
சுவாசச் சலவைகள் நடத்தி நிற்கும்
பின்பு வெற்றிடங்களின் இடை நடுவே புகுந்து
உன் நினைவுகளை அங்கு முல்லைச் சரங்களால் பதியமிடும்
என்னில் அசுத்தம் களைய வீசும் ஒளடதப் பூங் காற்றே
என் சுவாசத்துக்கு நிரந்தரக் காப்பீடு
நீ தொடர்ந்து தரச் சம்மதம் கொடுப்பாயா?
ஆக்கம்
அஷ்ரப் அலி