மெய்

"என்ன இது!!!
என்றுமில்லாது இன்று தண்ணீர்
வண்ணக்கோலம் பூண்டு
வனப்பாகத் தெரிகிறதே!!!"
என்று நான் வியந்து...நொடிப்பொழுதில்
ஏகமுறை மணம் உவந்து....
இந்நிகழ்வை
எட்டாம் அதிசயத்தில் சேர்க்கப்போன நான்.....
பட்டாம்பூச்சியென அவள் அந்நீரில்
முகம்கழுவிப் பறந்தபின்தான்...
மெய்யறிந்து.....
முடிவைக் கைவிட்டேன்.....