புதுமைப் பெண்

ஆம் புதுமை தான்
எனினும்….
எம் பெண்டிர் அனைவரின் வாழ்வு காத்த
கிருஷ்ணையின் தியாகம் இன்று வீீணாய்ப் போனதுதான் புதுமையோ!!

எம் அழகு நகரை நீதிக்காக எரித்த
கண்ணகியின் நீதிக்கண்கள் இன்று மறைந்து போனதுதான் புதுமையோ!!

எம் பாரதநாட்டை மீட்டெடுத்த
ஜான்சி ராணியின் வீரம் இன்று கதையாய்ப் போனதுதான் புதுமையோ!!

உலகநலன் காத்த எம் பெண்டிர் அனைவரும்
இன்று தன் நலம் காக்க
யாசகம் கேட்பதுதான் புதுமையோ!!

இல்லை…!!
எம் பாரதி காண விரும்பிய புதுமை இது அல்ல!!

எழுதியவர் : பூர்ணி கவி (2-Aug-17, 10:32 am)
சேர்த்தது : பூர்ணி கவி
Tanglish : puthumaip pen
பார்வை : 82

மேலே