பெற்ரோர்களை வாழ்த்தி

அம்மா அப்பா நீவீர்
உலகம் காண வைத்தீர்

தேடி பார்த்தாலும் கிட்டவில்லை
பாடி பார்த்தாலும் இது தீரவில்லை
நீவிர் அன்பின் எல்லை
நீவிர் பண்பின் எல்லை
நீவிர் சொல்லும் சொல்லே
என் வேதமாகும்
நீர் என்னும் வண்ணம்
நான் இருப்பேன் திண்ணம்

இளங்காலை எழுவீர்
எனக்காக வாழ்வீர்
நீரே என்னைப் பிரியாமல் இருப்பீர்
நிலவும் வானும் போல
கண்ணின் மணியாய்
இமைப் போல காப்பீர்
கணிவாய் இனிதாய்
கருத்தே சொல்வீர்

யோகம் என்பது
உங்களுக்கு நானா
எனக்கு நீங்களா
காலம் கூறும்
கனிவாய் கூறும்
காலம் காலமாய் நான் சேவையாற்ற
காலனை வேண்டுகிறேன் காலம் காலமாய்
நீவீர் வாழ!

எழுதியவர் : மாதிஹ் (3-Aug-17, 5:39 pm)
சேர்த்தது : மாதிஹ்2000
பார்வை : 178

மேலே