ஏதுமறியா பள்ளி பருவம்...


வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக..
அம்மாவிடம் பரிசாக வாங்கிய முத்தம்...

பொங்கல் விளையாட்டு போட்டியில் பொருள் பார்த்து ஒப்புவித்தலில்.....பார்த்த பொருளை மறந்து போய்.. திரு திருவென விழித்த விழிகள்....

தண்ணீர் அருந்துவதாக கூறிக்கொண்டு பக்கத்து வீட்டில் திருடி தின்ற மாவற்றல்...

பள்ளி செல்லும் போது யாரும் தெரியாவண்ணம்... தாத்தா கொடுத்த இரண்டு ரூபாய்....

சொல்லிக்கொள்ளாமல் பக்கத்து தெரு சென்றதற்காக...அம்மாவிடம் என்னுடன் சேர்ந்து முருங்கை மரம் வாங்கிய அடி....

அத்தை வீட்டு முற்றத்தை தாண்டுவதாக சவால் விட்டதில் காணாமல் போன ரெண்டு பற்கள்...

சொர்க்கமாக நினைத்து ஓடித்திரிந்து.... விளையாடிய வாரத்தின் ரெண்டுநாள் விடுமுறை...

தேர்வில் அக்கா தோற்க வேண்டுமென.... விநாயகரிடம் வேண்டுகோள் வைத்த அறியா.... பருவம்...

என்னை மறவாமல் நினைவுகளும் ...
நினைவுகளை மறவாமல் நானும்....

எழுதியவர் : a.buvaneswari (21-Jul-11, 2:33 pm)
பார்வை : 1157

மேலே