இதயம் செபிக்கிறது

துணையாய் ஆறுதலாய் இருக்கும் இதயமெல்லாம் தேடினால் கிடைக்காது சந்தேகமே இதயத்துடிப்புகளாய் மாறிவிட்டிருப்பதாலே...

மாமனென்ன? மச்சியென்ன?
உன் வேதனையை ஏற்கவும், போக்கவும் உன்னால் மட்டுமே இயலும்...
உன் இதயத்தைப் பலப்படுத்து...

ஞமிறுகளிடத்து உயர் ஞானமுரைத்தாலும் ஞமிறுகள் தங்கள் வழக்கம் போல் முழங்குவதையே முழங்குகின்றன பழக்கவழக்கங்களில் ஊறிப்போன தீஞ்சோற்களோடு...

நாளுக்கு நாள் பொறுமை காத்த போதிலும் திருந்தாத ஞமிறுகளிடத்து திருத்தம் ஏற்படவே சிந்தனை கொண்டு இறைவனைப் பணிகிறேன் நித்தமும்...

வெறுப்பது நானல்ல...
வெறுப்புடைய இதயங்களின் பிரதிபலிப்பு...

ஆடம்பரத்திற்கு நடக்கும் போட்டியான வாழ்விலே, ஏற்படும் துன்பங்களென்றும் கெட்டியாக...

இயேசுநாதரைச் சந்தித்தால் எனக்கொரு சிலுவை கேட்பேன் இப்பாவிகளின் பாவம் களைய அதிலே நானேறுவேன்...
நித்தமும் இங்கு வாழ்வதைவிட இறப்பு இனிமை தருமென்றே இதயமும் ஏக்கமுற இதயங்களின் சத்தியமான துடிப்பென்ன?
அது சாத்தியமான துடிப்பா?
என்று ஆராய்ச்சியில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் மனிதக்கூட்டங்களில் இருந்து...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Aug-17, 9:48 pm)
பார்வை : 806

மேலே