எது முத்தம்

எது முத்தம்..?
மேகக்கூட்டம்
மலை முகடில்
மோதுவதா..

தூரல்
மண்ணில் சிந்தி
முட்டுவதா..

பனித்துளி
புல்லின் நுனியில்
அமருவதா..

வண்டுகள்
பூக்களின் அழகை
வருடுவதா..

காற்று
இதமாய் இலைகளை
கோதுவதா..

சூரியன் முகம் கண்டதும்
தாமரை விரிக்கும்
முதல் இதழா..

எல்லாமே
முத்தங்கள் தான்..

உதடுகளைக் குவித்து
நேசத்தை பரிமாறிக்கொள்ளும்
மனிதனைப் போல..

இயற்கையும்
முத்தமிட்டுக் கொள்கின்றன
காதலைப் பரிமாறியப்படி...

எழுதியவர் : ஆர்.சரண்யா (13-Aug-17, 1:05 pm)
Tanglish : ethu mutham
பார்வை : 142

மேலே