சொன்னார்கள்...........!!!!!!


அங்கிருந்து வந்தவர்கள்
சொன்னார்கள்
இங்கிருப்பவர்கள்
அங்கிருப்பவர்களைபோலில்லை என்று

இங்கிருப்பவர்களும் சொன்னார்கள்
அங்கிருந்து வந்தவர்கள்
இங்கிருப்பவர்களைப்போலில்லை என்று

யாரோ சொன்னார்கள்
யாரும் யாரைபோலும்
இருக்கவேண்டியதில்லை என்று.....!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (22-Jul-11, 12:00 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 323

மேலே