உழைப்பாளி சொல்லும் உண்மை
பசுமைக் காட்டில் படுத்துறங்கும் நிலமகள்
பச்சை வயல்கள் படர்தல் எங்கே ?
இயற்கை அன்னை ஏங்கித் தவிக்க
இன்பம் இல்லா உலகம் தன்னில்
செயற்கையைப் புகுத்தி செயற்பாடும் இழந்து
சேர்த்த செல்வம் செத்தும்போக
விளைநிலங்கள் அடுக்குமாடிகளாய்
விண்ணை முட்ட கட்டுகின்றார் .
கண்ணீர் பெருகும் கண்களில் சோகம் !!
இனிச் சோறு எங்குண்டு ? சொல்வீர் !
உழைப்பாளியின் கைதனிலே தன்னம்பிக்கை .
உழுதுண்டவன் உண்கின்றான் பழைய சோற்றை !
உலகிற்கே தருகின்றான் பொங்கலினை !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்