கவிதை
கவிதை
மேலே உள்ள வரியில்
முடியலாம்
பறவையின் நிழல்
என் நிழலோடு சேரும்போது
முடியலாம்
குயில் குரல்
பசிக்கு கத்தும்போது
முடியலாம்
மழலை பாலுக்கு
அழும்போது
முடியலாம்
விளக்கேற்றியவுடன்
பிரகாசமாய் தெரியும் இருளில்
முடியலாம்
முடியலாம்
என்ற வார்த்தைக்குள்
கவிதை முடியலாம்
-J.K.பாலாஜி-