காதல்

இந்த பாழாய்போன பிரியம்
என்னை பாடாய்படுத்துகிறது ..
என் கண்களை கட்டி
இருளில் தள்ளிவிடுகிறது ...
என் முன்னே உள்ள அனைத்து
உயிர் உள்ளவைகளை மறந்து
உயிரற்றவையுடன் உறவாடுகிறேன் ...
இறைவனே..
இரக்கம் செய்யும் ...
இந்த பைத்தியத்தில்
இருந்து விடுதலை தா ...
இந்த பிரியம் ...
இந்த அன்பு ..
இந்த காதல் ..
இரக்கமற்று என்
இரவுகளை ஈரமாக்குகிறது ....
என் உறவுகளை கலைத்து விடுகிறது ...
நான் நானாக வாழாமல்
வாழ்கிறேன் நானும்
அவன் நினைவாக மட்டும்...

எழுதியவர் : (22-Aug-17, 3:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 97

மேலே