அழகிய தொடர்கதை

நித்தமும் என்னை நீங்குகையில்,
சத்தமும் இன்றி
ரத்தமும் இன்றி
யுத்தமொன்றை நடத்திச் செல்வதிலேயே
சித்தமாக இருக்கின்றாயே !!!!
யுத்தம் முடிந்தபிறகு....எப்போதும்போல்
மொத்தமாக நான் தோற்றபிறகு....பின் என்
பித்தம் தெளிந்தபிறகு தான் புரிகிறது....அய்யுத்தம்
சுத்தமான காதலை நீ இதழ்வழியே பரிமாறிய நம்
முத்தம் என்று !!!!!