எனதுயிர்த் தோழியே

அன்புக் கடலை
அள்ளித் தந்த வானமாய்
இயற்கையின் படைப்பினில்
இப்பூவுலகில் பூத்த புன்னகையே....!

உதிரத்தின் உறவுகளைத் தாண்டி
என் உயிருக்குள் கலந்த
உன்னத உறவே.....!

தாய், தங்கை, தாரம்
இவற்றில் ஏதுமின்றி
என் பிறப்பினைப் புதுப்பித்த
பெண்மையின் இலக்கணமே....!

காலம் எத்தனைக் கடந்தாலும்
கற்பனைக் காவியமாய்
கண் இமைக்குள் வாழும்
எனதுயிர்த் தோழியே.....!

எழுதியவர் : ப. சௌந்தர் (25-Aug-17, 5:28 pm)
பார்வை : 854

மேலே