தள்ளிப்போகும் தாய்மை
மண்ணைக் கூட அள்ளித் திண்கிறேன்
நீ கிடைப்பாய் என்றால் ...
மருத்துவமனைகளில் தவமிருக்கிறேன்
மடியில் நீ தவழ...
விரதங்கள் பல இருந்தேன்
விரல் பிடிக்க நீ வருவாயென...
பெற்றவளுக்கோ ஒரு நாள் வலி
எனக்கோ ஒவ்வொரு நாளும் வலி...
விசேஷங்களை புறக்கணித்தேன்
ஏதும் விசேஷம் இல்லையா எனும் வார்த்தையால் ...
மருந்து மாத்திரைகளில் பசியாறுகிறேன்
உனக்கு பாலூட்டி பசியாற்ற ...
பொறுமையை கூறும் உறவுகளும்
பொறுப்பாய் பார்ப்பதில்லை ...
இறைவனிடமும் கோபம் கொள்கிறேன்
இன்னும் உன்னை தர மறுப்பதால் ...
இதழ்களில் சிரிக்கிறேன்
இதயத்தில் அழுகிறேன் ...
கடவுளிடம் சண்டையிடுகிறேன் - ஏன் அன்பான கணவனை கொடுத்தாய் என
ஆச்சர்யமாய் தெரிகிறதா ?
விட்டு வாழவும் முடியவில்லை
விட்டு சாகவும் முடியவில்லை...!