தமிழ்ப் பழமொழிகள்-
தமிழ்ப் பழமொழிகள் அளவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுது இல்லை. அளவு இட்டவரைக் களவு இடலாமா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். அளிஞ்சு பழஞ் சோறாய்ப் போச்சுது. அளுக்கு விட்டு நாய் உளுக்கையிலே; ஐயா வீட்டு நாய் சவுக்கையிலே, 1455 அளுங்குப்பிடி பிடித்தாற் போல. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும். அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் வருமா? (பி-ம்.,) பொன் கொடுத்தாலும். அற்பச் சகவாசம் பிராண சங்கடம். (பி.ம்.) பிராண கண்டிதம். அற்ப சகவாசம் பிராண சங்கடம். 盟48G (பி-ம்.) சிநேகிதம். அற்ப சந்தோஷம். அற்ப சுகம், கோடி துக்கம். அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டால் திருக்குளத்தில் போட்டுத் தேடி எடுக்குமாம், (பி.ம்.) கிடைத்தால், அற்பத்திற்கு அழகு குலைகிறதா? அற்பத் துடைப்பம் ஆனாலும் அகத் தூசியை அடக்கும். 1485 (பி-ம்.) அறைத் தூசியைப் பெருக்கும். அற்பப் படிப்பு ஆபத்தை விளைவிக்கும். அற்பம் அற்பம் அன்று. அற்பன் கை ஆயிரம் பொன்னிலும் சற்புத்திரன் கைத் தவிடு நன்று. அற்பன் பணம் படைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான், 1470 (பி.ம்.) பணம் வந்தால் இடம் அறியான். அற்பன் பவிஷ அரைக்காசு பெறாது. அற்பனுக்குப் பவிஷ வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். (šizot- மழையில் கோடைக்கானல் போகான்
விக்கிமூலம்