எனக்கும் வந்தது உன்னைக் காணாமல் இருந்திருக்கலாம் -9

விதையில்லா மரமா என் காதல்
சதையில்லா மனமா என் பாடல்
சுதைல்லா வனமா என் வானம்
இதெல்லாம் அறியுமா உன் மனம்

எனக்கும் வந்தது கொஞ்சம் காதல்
அதைத் தந்ததும் உன் கூடல்
எனக்கும் வந்தது கொஞ்சம் ஆசை
அதைத் தந்தது உன் மீசை

எனக்கும் வந்தது கொஞ்சம் நேசம்
அதைத் தந்தது உன் பாசம்
எனக்கும் வந்தது கொஞ்சம் ஏக்கம்
அதைத் தந்தது உன் நெருக்கம்

எனக்கும் வந்தது கொஞ்சம் மயக்கம்
அதைத் தந்தது உன் கிறக்கம்
எனக்கும் போனது கொஞ்சம் தூக்கம்
அதைத் தந்தது உன் தாக்கம்

எனக்கும் வந்தது காதல் ஜுரம்
அதைத் தந்தது உன் திறம்
எனக்கும் திறந்தது இளமையின் புறம்
அதைத் தந்தது உன் அறம்

எனக்கும் வந்தது கனவுகளின் நேரம்
அதைத் தந்தது உன்விழி ஓரம்
எனக்கும் எட்டியது கவிதையின் தூரம்
அதைத் தந்தது உன் தீரம்

எனக்கும் வந்தது நாணத்தின் ஆரம்
அதைத் தந்தது உன் கரம்
எனக்கும் வந்தது ஆண்மையின் வீரம்
அதைத் தந்தது உன் சிரிப்பு

என்னருகில் வந்தது அழகின் கீரம்
அதைத் தந்தது நம் நட்பு
என்னருகில் வந்தது குளிர் வாரம்
அதைத் தந்தது உன் அன்பு

எனக்கும் வந்தது இதயத்து பாரம்
அதைத் தந்தது உன் தூரம்
எனக்கும் வந்தது கண்களில் ஈரம்
அதைத் தந்தது உன் ஸ்வரம்

எனக்கும் நேர்ந்தது காதலின் கோரம்
அதைத் தந்தது உன் பிரிவு
எனக்கும் வந்தது இதயத்தில் காரம்
அதைத் தந்தது உன் தூரம்

நான் கண்டது வார்த்தைகளின் வைரம்
அதைத் தந்தது நீதந்த கவிதைகள்
நான் கொண்டது வலிகளின் சாரம்
அதைத் தந்தது உன் நினைவுகள்

இத்தனையும் தந்த நீ
உன்னை தராமல் மட்டும் சென்றாய் ஏனடி
அத்தனையும் தந்த நீ
என்னை நட்பு மட்டும் என்றாய் ஏனது

எழுதியவர் : யாழினி வளன் (1-Sep-17, 7:35 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே