எனக்குள் ஒரு காதல்

திட்டி திட்டி தீர்த்தனர்
ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொன்னாய்
அவள் மனது புரியாமல் போன
கல் நெஞ்சக்காரன்
அவள் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பாவி
நம்பியவளை கெடுத்து மோசக்காரன்
எதைப்பற்றியும் கவலை கிடையாது எனக்கு
யார் திட்டினால் எனக்கென்ன
கோபமாய் சொல்லிவிட்டேன் அவள் எனக்கு வேண்டாம் என்று
இதனாலே திட்டி திட்டி தீர்த்தனர்
இவனுக்கெல்லாம் எங்கே காதல் வரப்போகுது
கல்யாணம் நடக்கப்போகுது
அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல்
எனது அறைக்கு சென்று விட்டேன்
இப்போது அழுகிறேன்
கதறி அழுகிறேன் சத்தம் வராமல்
நான் காதலித்தவள் என்னை காதலிக்கவில்லை
அவளை மணம் முடிக்க
ஏற்பாடு செய்தும் வேண்டாம் என்றேன்
அவளின் காதலுக்காக
அவள் காதல் வெல்ல என் காதலை புதைத்தேன்
யாருக்கு தெரியும் என் காதல்
அவளுக்கே தெரியாத புரியாத என் காதல்
இனி யாருக்கு தெரிய வேண்டும்
என் காதல் என்னோடு
எனக்குள்ளும் ஒரு காதல்
யாருக்கும் தெரியாத காதல்
அழுது புரளும் என் காதல்
அவள் நினைவிலேயே வாழும் என் காதல்
இது எனக்குள் ஒரு காதல்

எழுதியவர் : முரளிதரன்.B (23-Jul-11, 1:55 pm)
பார்வை : 419

மேலே