உலகை பொதுவுடமையாக்குவோம்
உலகை பொதுவுடமையாக்குவோம்...!
ஆதவனின் ஒளிக்கதிர் வெள்ளம்
அகிலத்திற்கே பொதுவான வெளிச்சம்
அடுக்குமாடிகள் கட்டி மறைத்தால்
அருகாமைசேறி குடிகளுக்கே நட்டம்
ஓடும் வெள்ளம் பள்ளத்தை நிரப்பும்
மேடுகள் தகர்த்தால் நீர்வரத்து சேரும்
மேடுபள்ளமின்றி ஏற்றங்கள் பொதுவானால்
மாற்றங்கள் யாவும் போற்றுதலாய் நலம்பெறும்
பொதுவான தெய்வம் ஒளிச்சுடர் வேண்டும்
பொதுவான இனம் மனிதம் வேண்டும்
பொதுவான மொழி அன்பு வேண்டும்
பொதுவான நீதி வேதம் வேண்டும்
வட துருவம் உருகி கசிந்தால்
தென் துருவம் வரை நனைந்திட வேண்டும்
ஒன்றான உறவாய் மனிதயினம் கூடி
உலகை பொதுவுடமையாக்கி வாழ்ந்திட வேண்டும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி