நட்சத்திரங்களோடு நான்

மின்னி எரியும் நட்சத்திரங்கள் கேட்டது
போதுமா ஒளி?
போதுமே அழகு என்றேன்

நடு வானில் ஏன் எந்த ஊர்வலம்?
யார் சொன்னது ஊர்வலம் என்று
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

வாழ்க்கை இவளவு அழகா?
பார்ப்பவர்களின் கண்ணை பொறுத்தது
பதிலளித்தது நட்சத்திரம்

பிரிவு,துக்கம்,தோற்றம்,
மறைவு எல்லாம் உண்டா?
அது இல்லாமலா வாழ்க்கை

அதையும் தாண்டி
எப்படி ஒளி சிதறல்?
வாழ்ந்துபார் புரியும்

புரியவில்லை ஆனாலும் ரசிக்க தொடங்கினேன்
நட்சத்திரத்தியும்,வாழ்க்கையையும்

எழுதியவர் : மீனா (6-Sep-17, 1:52 pm)
சேர்த்தது : மீனா
பார்வை : 374

மேலே