சேர்த்து வைத்த கனவு

சேர்த்து வைத்த கனவு !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்


பகலில் நினைவலைகள்
இரவில் கனவலைகள்
இடையிலோ
எண்ண அலைகள் !

எண்ண அலைகளோ ஒரு
இயங்கும் வண்ணப்பறவை
அது கலக்கும்
நினைவலை உறவை
பிறக்கும் கனவலைகள் !

எண்ணங்கள் நினைவுகள்
பிரதிபலிப்புகளே
நாம் காணும் கனவுகள் !

நல்ல எண்ணங்கள்
அள்ள அள்ளக் குறையாமல்
சேர்த்து வைத்து
செயல்பட்டால்
மனிதன் புனிதமாவான் !

நல்ல கனவுகளையும்
எண்ணத்தின் செயல்பாடுபோல்
சேர்த்து வைத்தால்
கனவுகளும் புனிதமாகும் !

நல் எண்ணம்போல்
கனவுகளையும்
சேர்த்து வைத்தால்
கனவுகள் நனவாகும்
நனவுகளும் புனிதமாகும் !


பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (8-Sep-17, 11:53 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 87

மேலே