நதியைக் கடக்கும் சிறகுகள்
நதி
அப்படியேதான்
ஓடிக்கொண்டிருக்கிறது
சிலர்
நீந்திக் கடக்கிறார்கள்
சிலர்
படகில் கடக்கிறார்கள்
இன்னும் சிலரோ
சிறகுகளை
தேடிக்கொண்டிருக்கிறார்கள்
கடப்பதற்கு
நதி
அப்படியேதான்
ஓடிக்கொண்டிருக்கிறது!
@இளவெண்மணியன்