போராட்டத் தியாகிகள்

எண் சீர விருத்தம்

(காய் காய் காய் மா)

அயலான புலிஎல்லாம் வங்கதேச வீரர்
இயவுவகுத் ததில்சுகதேவ் பகத்சிங்போ செல்லாம்
நயங்கூடி யரவிந்தும் நயமில்தீ வீரமாம்
வயவுமிக்க திலக்படேலும் நேருகாந்தி மிதமாம்
செயல்வீரர் காமகக்கர் அரசகோபால் தமிழாம்
வயல்விடுத்த பலசாதி யினர்விடு தலைக்கு
பயமின்றி பலபோராட் டங்களிலே குதித்தார்
செயக்கொடிஏந் தியேசெயல்ம றவர்குவிந்தார் பாரு

காந்திசுதந் திரப்போராட் டவரிசையில் தலைவர்
காந்திக்கு முன்பின்னெ னக்கணக்கி டல்கேள்
முந்தையர சிலேபுதுக்கோட் டைமன்னர் ஆண்டார்
முந்தைமரு துபொம்மு எட்டைஎல்லாம் ஜமீன்கள்
தாந்தோனி யாய்தனித்துத் தொடைத்தட்டி சமரில்
சேந்தணைக்கூ வியேப்போர்பு ரியஅமரர் ஆனார்
முந்தைஜமீன் களெல்லாம்ஒன் றுசேராது ஆண்டார்
காந்தியாரோ அகண்டபார தவிடுதலைக் கேட்டார்

- ராஜ பழம் நீ (9-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (9-Sep-17, 10:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 464

மேலே