எண்ணங்கள் கோடி எதைத்தான் எழுதுவது

எதை எழுதுவது
எண்ணங்கள் கோடி
எழுத்துக்கள் மறுக்கின்றது!
உன் கூந்தலின் வெள்ள இருட்டில் தொலைந்து மல்லிகை மலரின்
வாசனை கரையில் சுவாசம்
கொள்வதை எழுதுவதெப்படி?
விரல்களின் தீண்டலில்
பிரளையங்களின் வண்ணம் என்ன?
நதியில் வெள்ளம்!
ஆழியின் அலையில் பேரலை!
மனதின் உணர்வுகளை
வரைவதெப்படி?
சிறைகொண்ட தேனீயின்
நுகர்வுக்கு மலர்களின் வாடையை
கூறும் தென்றலுக்கு!
சுவைத்தலின் நிறங்களை
சொல்வதெப்படி?
அறிவெனும் நிதமும்
நிஜமெனும் நிழலும்
நீயோ? கலைக்கவோ?
பார்வையின் பிரசவம்
நீயும் நானுமடி!
காதலெனும் வேங்காட்டினில்
உதிர்த்திடும் உறவுகளில்
நிறையே!
உயிரின் உதர்வுகள்
யாவும் கலையே!
எண்ணங்கள் கோடி
எதைத்தான் எழுதுவது?
பெண்ணே!
பல நேரங்களில்
சொல்லும் எழுத்துமறியா?
நான் நானேதான்.....

எழுதியவர் : சுரேஷ் குமார் (14-Sep-17, 10:21 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 138

மேலே