வெறும் சதையா பெண்
![](https://eluthu.com/images/loading.gif)
வெற்று சதையாக கொடூர அரக்கர்களின் பசிக்கு தீனியா பெண்???
சகோதரம் என்று சொல்லி ஒரு கும்பல்
உறவுக்காரர் என்று சொல்லி ஒரு கும்பல்
உதவி என்று சொல்லி ஒரு கும்பல்
காதல் என்று ஆசை வார்த்தை கூறி ஒரு கூட்டம்
பகலில்
இரவில்
வீட்டில்
தெருவில்
பஸ்ஸில்
பாடசாலையில்
அலுவலகத்தில்
ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த நிலை???
புராண கதைகள் முதல் 21ம்நூற்றாண்டு கலியுகம் வரை ஏன் இந்த விமோசனம் இல்லாத சாபம் பெண்ணிற்கு???
பால்குடி மாறாத பச்சைக்குழந்தை முதல் பல்லுப் போன பாட்டி வரை
வெறும் ஆசைக்கு தீனி தான் பெண்ணா???
பாவாடை தாவணி முதல் ஜீன்ஸ் வரை ஆசையை தூண்டும் உடைகளா???
பல கனவுகளுடன் பட்டாம்பூச்சியாய் சுற்றி வரும் ஒரு உயிருள்ள ஜீவன் தான் பெண் என எப்போது புரியபோகிறது இந்த பாழ் பட்ட உலகத்திற்கு???
பாரதியின் புதுமை பெண்களை மீண்டும் சிறையில் தள்ளி விடாதீர்கள்!!!
பெண்களை வெறும் சதையாக பார்க்கும் கொடூரர்களுக்கு மத்தியில் இன்னொரு பாரதி பிறக்கவா போகிறான்?????????