நான்
![](https://eluthu.com/images/loading.gif)
'நான்' என்னை செவிடாக்கியது
'நான்' என்னை குருடாக்கியது
நான் நானாக மாற
'நான்' என்னை விடவில்லை
நான் இருக்க
'நான்'இறக்க வேண்டும்
'நான்'இறக்க நானை
நான்தான் உதறவேண்டும்
'நான்' என்னுடன் இருக்கும் வரை
நான் நானாக இல்லை
'நான்' இறந்தபின்னே
நான் என்ற வார்த்தைக்கே
அர்த்தமில்லை!
#சேகர்_நா